/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை
/
திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை
திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை
திருமண நிதியுதவி பெற லஞ்சம் பெற்ற அலுவலருக்கு ஓராண்டு சிறை
ADDED : ஜன 30, 2025 10:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த, வினாயகநல்லுாரை சேர்ந்த ரங்கநாதன் மகள் தேவி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, காழியூர் கிராமத்தைச்சேர்ந்த கோபால் மகன் ஸ்ரீதர் என்பவரை திருணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பே, தேவியின் தந்தை ரங்நாதன் இறந்து விட்டார். அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருமண உதவி திட்டத்தில், 20,000 நிதி பெற உரிய ஆவணங்களுடன், தேவி 2009 ம் ஆண்டு, விண்ணப்பித்தார்.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்த ஊர்நல அலுவலர் ஜோயல்பத்மினி என்பவரை, அணுகினார். திருமண நிதியுதவி காசோலை வந்திருப்பதாக கூறி 850 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவியின் கணவர் ஸ்ரீதர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 850 ரூபாயை ஸ்ரீதர் இடம் கொடுத்து அனுப்பியபோது, அதை வாங்கிய ஜோயல்பத்மினியை மறைந்திருந்த போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடை பெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஜோயல் பத்மினி, 73 என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ தீர்ப்பளித்தார்.

