sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழைய வாகனங்கள் வரும் 31ல் ஏலம்

/

பழைய வாகனங்கள் வரும் 31ல் ஏலம்

பழைய வாகனங்கள் வரும் 31ல் ஏலம்

பழைய வாகனங்கள் வரும் 31ல் ஏலம்


ADDED : ஜூலை 27, 2025 08:57 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள், வரும் 31ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், வரும் 31ம் தேதி காலை 10:30 மணியளவில், செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளன.

இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், காலை 10:00 மணிக்கு, முன் பணமாக 1,000 ரூபாய் செலுத்தி, ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

மேலும், ஏலம் எடுப்பவர்கள், ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியும் உடனே செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட ஆயுதப்படை அலுவலக தொலைபேசி எண்கள் 94981 46628 - 88254 65897 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us