/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வடிகால்வாய் இல்லாத ஓ.எம்.ஆர்., சாலை தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
/
வடிகால்வாய் இல்லாத ஓ.எம்.ஆர்., சாலை தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
வடிகால்வாய் இல்லாத ஓ.எம்.ஆர்., சாலை தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
வடிகால்வாய் இல்லாத ஓ.எம்.ஆர்., சாலை தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஆக 04, 2025 01:53 AM

திருப்போரூர், ஆக. 4--
தையூர் ஓ.எம்.ஆர்., சாலை ஓரம் தேங்கும் கழிவுநீர் முறையாக வெளியேற கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் குளம்போல் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் வீராணம் சாலை இணையும் இடத்தில் ஓ.எம்.ஆர்., சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலம் வழியாக ஓ.எம்.ஆர்., சாலை மேற்கு புறத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் மற்றும் அங்குள்ள வணிக கடைகள், குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீரானது ஓ.எம்.ஆர்., சாலை கிழக்கு புறத்தில் வந்து சாலை ஓரம் தேங்கி நிற்கிறது.
நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வரும் இந்த ஓ.எம்.ஆர்., சாலை ஓரம், கிழக்கு புறத்தில் கழிவுநீர், மழைநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால், சில ஆண்டுகளாக, நாளுக்கு நாள் மழைநீர், கழிவுநீர் வரத்து அதிகரித்து சாலை ஓரத்தில் குளம் போல் தேங்கியுள்ளது.
அங்கு தேங்கும் கழிவு நீர், மழைநீர் அருகே உள்ள காலிமனை, தனியார் தோட்டம், கிணறு போன்ற இடங்களிலும் சூழ்ந்து ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது.
இந்த பகுதி முழுதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு உள்ள பகுதியாக மாறியுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலை ஓரம் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, தையூர் ஓ.எம்.ஆர்., சாலையில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்றவும், அங்கு தொடர்ந்து கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வகையில் புதிய வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.