ADDED : மார் 25, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:அரையப்பாக்கத்தில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை, மதுராந்தகம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மதுராந்தகம் காவல் எல்லைக்குட்பட்ட அரையப்பாக்கம் கிராமம், திருக்கழுக்குன்றம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 30.
இவர், அரையப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்து, விற்பனை செய்து வருவதாக, மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்படி, மதுராந்தகம் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். இதில், கார்த்திகேயனிடம் இருந்து, 7,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவரை கைது செய்த போலீசார், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச் சிறையில் அடைத்தனர்.