/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'லிப்ட்' அறுந்து விழுந்து விபத்து மறைமலைநகரில் ஒருவர் பலி
/
'லிப்ட்' அறுந்து விழுந்து விபத்து மறைமலைநகரில் ஒருவர் பலி
'லிப்ட்' அறுந்து விழுந்து விபத்து மறைமலைநகரில் ஒருவர் பலி
'லிப்ட்' அறுந்து விழுந்து விபத்து மறைமலைநகரில் ஒருவர் பலி
ADDED : பிப் 13, 2025 08:51 PM
மறைமலைநகர்:திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்,36. அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது நண்பர் பிரசாந்த்,32.
இருவரும் 'ஏ.எம்.ஏரோ லிப்ட்' என்ற தனியார் நிறுவனத்தில், 'டெக்னீஷியன்'களாக பணிபுரிந்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை 'சி1 பிளாக்'கில் உள்ள பழைய மின் துாக்கியை அகற்றி, புதிய மின்துாக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருவரும், நான்காவது மாடியில் இருந்த மின் துாக்கியின் மீது நின்று பணிபுரிந்தனர்.
அப்போது, மின்துாக்கியில் இணைக்கப்பட்டு இருந்த சங்கிலி திடீரென அறுந்தது. இதில், மின்துாக்கி வேகமாக சென்று, கீழே இருந்த 'ஸ்பிரிங்' மீது மோதி, மீண்டும் ராஜேஷ் மற்றும் பிரசாந்த் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
இவர்களில் ராஜேஷ், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரசாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.