ADDED : ஜன 02, 2024 04:45 AM

அ நிறம் | அளவு
சென்னை : சென்னை எம்.ஜி.ஆர்., நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அஜய், 17, போதை மாத்திரை விற்பனை தகராறில், கடந்த 26ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த டேவிட், 28 என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், சரவணன், 28 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
