ADDED : ஆக 29, 2025 11:51 PM
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் அருகே 65 வயது நபர் மீது சரக்கு வாகனம் ஏறி உயிரிழந்தார்.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்தவர் ராமசாமி, 65, நேற்று முன்தினம் இரவு 7:50 மணியளவில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அகோர வீரபத்திரன் சுவாமி கோவிலுக்கு தன் மகன் சேது பிரசாத், 36 என்பவருடன் 'ஹோண்டா ஹார்னட்' பைக்கில் சென்றார்.
சிங்கபெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் சாலையில் சென்ற போது எதிரே வந்த 'பொலிரோ' சரக்கு வாகனத்திற்கு வழி விட சேது பிரகாஷ் பைக்கை இடது பக்கம் திருப்பினார். அப்போது சாலை ஓர பள்ளத்தில் பைக் இறங்கியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த ராமசாமி தடுமாறி சாலையில் விழுந்தார். அவர் மீது சரக்கு வாகனம் ஏறியது. இதில் ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
---