/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேருந்தில் அமர்ந்தபடி ஒருவர் பலி
/
பேருந்தில் அமர்ந்தபடி ஒருவர் பலி
ADDED : நவ 17, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையை சேர்ந்தவர் சேகர், 52. பூந்தமல்லியில் தங்கி, சமையல் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை, வேலை விஷயமாக தாம்பரம் வந்து, பின் பூந்தமல்லி செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்தார்.
தலை சாய்ந்த படி இருந்ததால், ஓட்டுனர் சின்னதுரை என்பவர் சந்தேகப்பட்டு, அவரை தட்டி எழுப்பி முயன்றார். அப்போது, மயங்கி கீழே சாய்ந்துள்ளார்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், சேகர் இறந்தது தெரியவந்தது. தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

