/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பேருந்து மோதி ஒருவருக்கு கால் முறிவு
/
அரசு பேருந்து மோதி ஒருவருக்கு கால் முறிவு
ADDED : மார் 29, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம், வேதநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,50.
நேற்று முன்தினம், செங்கல்பட்டு சின்ன முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் இருந்து வெளியே வந்து, செங்கல்பட்டு - - மதுராந்தகம் சாலையை கடக்க முயன்ற போது, மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ராமமூர்த்தி மீது மோதியது. இதில், அவரின் இடதுகாலில் முறிவு ஏற்பட்டது.
அங்கிருந்தோர் ராமமூர்த்தியை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.