/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திறந்த நிலையில் மழைநீர் கால்வாய் மறைமலை நகரில் விபத்து அபாயம்
/
திறந்த நிலையில் மழைநீர் கால்வாய் மறைமலை நகரில் விபத்து அபாயம்
திறந்த நிலையில் மழைநீர் கால்வாய் மறைமலை நகரில் விபத்து அபாயம்
திறந்த நிலையில் மழைநீர் கால்வாய் மறைமலை நகரில் விபத்து அபாயம்
ADDED : மே 28, 2025 12:59 AM

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை பெருங்களத்துார் -- செட்டிபுண்ணியம் வரை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இதில், மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கால்வாய் பள்ளத்தை, அதற்கான மூடி வைத்து மூடவில்லை.
இதன் காரணமாக பாதசாரிகள், இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த மழைநீர் வடிகால் பள்ளத்தை, மூடியால் மூட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலைக்கும் அணுகு சாலைக்கும் இடையே செல்லும் மழைநீர் கால்வாய், பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது.
இந்த பகுதியில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், விபத்து ஏற்படும் வகையில் உள்ளது.
எனவே, இந்த பள்ளத்தை மூடி வைத்து முறையாக மூட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.