/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 7ம் தேதி நடை திறப்பு நேரம் மாற்றம்

ADDED : செப் 02, 2025 12:59 AM
திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வரும் 7ம் தேதி, நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் வழக்கமாக, காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல், இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும்.
இந்நிலையில் வரும் 7ம் தேதி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது, வரும் 7ம் தேதி, காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். அதன் பின், மறுநாள் 8ம் தேதி காலை 6:00 மணிக்கே நடை திறக்கப்படும். தொடர்ந்து வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.