/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விளாங்காடில் கல் குவாரிக்கு எதிர்ப்பு
/
விளாங்காடில் கல் குவாரிக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 20, 2024 11:13 PM
செய்யூர்:சித்தாமூர் அருகே விளாங்காடு கிராமத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே இக்கிராம மக்களின் பிரதான தொழில்.
விவசாய நிலங்களுக்கு அருகே, புதிய கல் குவாரி துவங்க, தனியார் நிறுவனம் அரசிடம் அனுமதி கோரி உள்ளதாக கூறப்படுகிறது.
விவசாய நிலங்களுக்கு அருகே கல் குவாரி துவங்கினால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். ஏரிக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டு, விவசாயம் முழுதும் பாதிக்கும்.
பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் வெடிகளால், விவசாயக் கிணறுகள் மற்றும் வீடுகள் சேதமடையும்.
அருகே உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் மயில்கள், கல் குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிகளால் பாதிக்கப்படும்.
குடியிருப்புப் பகுதி வழியாக கல் குவாரி லாரிகள் வந்து சென்றால், விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்படும்.
ஆகையால், புதிய கல் குவாரி துவங்க, அரசு தடை விதிக்க வேண்டும் என, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

