/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம சாலை திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
/
கிராம சாலை திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : ஜன 24, 2025 12:57 AM
செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், சாலைகள் பழுதடைந்தது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் ஆய்வு செய்து, கூடுதல் கலெக்டரிடம் அறிக்கை சமர்பித்தனர்.
அதன்பின், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், 5.35 கி.மீ., சாலையும், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், 5.57 கி.மீ., சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், 4.44 கி.மீ., லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 4.57 கி.மீ., திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 5.43 கி.மீ., திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5.19 கி.மீ சாலை என, மொத்தம் 30.45 கி.மீ., சாலைகள் புதிதாக போட, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2024-25ம் நிதியாண்டில், 15.20 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது.
இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றம், லத்துார், அச்சிறுப்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் முழுமையாக பணிகள் முடிந்துள்ளது.
திருப்போரூரில் 75 சதவீதமும், மதுராந்தகத்தில், 50 சதவீத பணிகளும், சித்தாமூரில் பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

