/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுச்சேரி பேருந்துகளில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கத்தில் பயணியர் அவதி
/
புதுச்சேரி பேருந்துகளில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கத்தில் பயணியர் அவதி
புதுச்சேரி பேருந்துகளில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கத்தில் பயணியர் அவதி
புதுச்சேரி பேருந்துகளில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கத்தில் பயணியர் அவதி
ADDED : அக் 17, 2025 08:24 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்ல பேருந்து வசதியின்றி அவதிப்படுகின்றனர்.
மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில், பிற மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர்.
இவர்கள் பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளை, தங்களின் சொந்த ஊரில் கொண்டாடுவர்.
ரயில், அரசு விரைவுப் பேருந்து ஆகியவற்றில் முன்பதிவு செய்து, செங்கல்பட்டிற்கு சென்று அங்கிருந்து மாறிச் செல்வர். முன்பதிவு செய்யாதோர், அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
குறிப்பாக சிதம்பரம், மயிலாடுதுறை, கும்ப கோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்குச் செல்வோர், சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளில் புதுச்சேரி சென்று, அடுத்தடுத்த ஊர் என மாறி மாறிச் செல்வர்.
பண்டிகை காலத்தில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், சென்னையிலிருந்தே கூட்ட நெரிசலுடன் செல்வதால் மாமல்லபுரம், கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் அவை நிறுத்தப்படுவதில்லை.
இப்பகுதிகளில் பயணியர் நீண்டநேரம் காத்திருந்தும், பேருந்தில் செல்ல மு டியாமல் தவிக்கின்றனர்.
நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின் நிறுத்தப்படும் ஏதாவது ஒரு பேருந்தில், நெரிசலில் முண்டியடித்து ஏறி, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நின்றுகொண்டே பயணம் செய்து அவதிப்படு கின்றனர்.
முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறே, மீண்டும் இங்கு திரும்பும் போதும் சிரமப்படுகின்றனர்.
தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகையின் போது மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளை ஒருங்கிணைத்து, அரசு போக்குவரத்துக் கழக, கல்பாக்கம் பணிமனை நிர்வாகம் சிறப்பு பேருந்து இயக்கினால், பயணியர் பயனடைவர்.
எனவே, இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.