/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : ஆக 20, 2025 02:33 AM

சித்தாமூர்:சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சித்தாமூர் அடுத்த நீர்பெயர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளி எதிரே, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது.
கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளது. தொட்டி வலுவிழந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை அகற்றி, புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.