/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் நெல்சாகுபடி 1.97 லட்சம் டன்னாக அதிகரிப்பு
/
செங்கையில் நெல்சாகுபடி 1.97 லட்சம் டன்னாக அதிகரிப்பு
செங்கையில் நெல்சாகுபடி 1.97 லட்சம் டன்னாக அதிகரிப்பு
செங்கையில் நெல்சாகுபடி 1.97 லட்சம் டன்னாக அதிகரிப்பு
ADDED : ஜூன் 18, 2025 07:56 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 1.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 30 ஆயிரத்து 265 விவசாயிகளுக்கு, 477.29 கோடி ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளன.
இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிகளவில், விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது. செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம் தாலுகா பகுதியில், குறைவாக விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.
பாலாற்றங்கரை பகுதியில், ஏரிபாசனம், ஆழ்த்துளை கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, குறுவை சம்பா, நவரை, என மூன்று போகம் நெல் சாகுபடி சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா பருவத்தில், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 620 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2024-- 25 சம்பா பருவத்தில், நெல் சாகுபடி மற்றும் அறுவடை மகசூல் ஆகிவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு அனுமதி வழங்கியது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பின், மாவட்டத்தில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அவுத்த, மணப்பாக்கம் ஊராட்சியில், ஜனவரி மாதம் 22ம் தேதி, துவக்கி வைக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையம் ஜூன் 30ம் தேதி வரை செயல்படும்.
மாவட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து, ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 863 டன் நெல், கடந்த 15ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்டு, 477 கோடியே 92 லட்சம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு 98 அரசு நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 23 ஆயிரத்து 509 விவசாயிகளிடம் ஒரு லட்சத்து 56 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2023 ம் ஆண்டு, 117 நெல் கொள்முதல் நிலையங்களில், 24 ஆயிரத்து 801 விவசாயிகளிடம், ஒரு லட்சத்து 63 ஆயிரம் டன், 2024 ம் ஆண்டு 109 அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில், 21 ஆயிரத்து 688 விவசாயிகளிடம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 700 டன், 2025ம் ஆண்டு, 140 நெல் கொள்முதல் நிலையங்களில், 30 ஆயிரத்து 265 விவசாயிகளிடம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 863 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் நெல் கொள்முதலில், செங்கல்பட்டு மாவட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.