ADDED : ஏப் 17, 2026 03:36 PM

அ நிறம் | அளவு
திருக்கழுக்குன்றம்: வீரகுப்பத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் அடுத்த, பொன்பதிர்கூடம், சோகண்டி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், விவசாயிகள் இரண்டு போகம் நெல் பயிரிட்டு சாகுபடி செய்கின்றனர். அறுவடை காலத்தில், நேரடி நெல் கொள்முதல் செய்ய, அவர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கையைத் தொடர்ந்து, தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், வீரகுப்பத்தில், நேற்று, நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது.
