/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பல்லவர், விஜயநகர நாணயங்கள் செங்கை பாலாற்றில் கண்டெடுப்பு
/
பல்லவர், விஜயநகர நாணயங்கள் செங்கை பாலாற்றில் கண்டெடுப்பு
பல்லவர், விஜயநகர நாணயங்கள் செங்கை பாலாற்றில் கண்டெடுப்பு
பல்லவர், விஜயநகர நாணயங்கள் செங்கை பாலாற்றில் கண்டெடுப்பு
ADDED : நவ 03, 2025 10:45 PM

மாமல்லபுரம்: விஜயநகர கால செப்பு நாணயம் உள்ளிட்டவை, செங்கல்பட்டு பாலாற்றில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலை, அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த வரலாற்று துறை விரிவுரையாளர் மதுரைவீரன், செங்கல்பட்டு பாலாற்று பகுதிகளில், தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இவர், தற்போதைய ஆய்வில், பண்டைய கால நாணயங்களைக் கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்று பகுதிகளில் ஆய்வு நடத்தியதில், நாணயங்கள் கிடைத்துள்ளன. இதில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கலப்பு உலோக நாணயத்தின் முன்புறத்தில், வலதுபுறம் நோக்கி நிற்கும் காளையின் உருவமும், அதன் மேற்புறம் ஸ்ரீவஸ்தம் சின்னமும் உள்ளன; பின்புறம், வெறுமனே உள்ளது.
விஜயநகர காலத்தைச் சேர்ந்த செம்பு நாணயத்தின் முன்புறத்தில், இடதுபுறம் நோக்கி நிற்கும் காளை உருவம் பொறிக்கப்பட்டு, அதைச்சுற்றி முத்துக்கள் கோர்த்த மாலை அலங்கரிக்கிறது. பின்புறம், கிருஷ்ணராயா என தெலுங்கு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

