/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு புது கட்டடம் ஒத்திவாக்கம் ஊராட்சி மக்கள் கோரிக்கை
/
அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு புது கட்டடம் ஒத்திவாக்கம் ஊராட்சி மக்கள் கோரிக்கை
அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு புது கட்டடம் ஒத்திவாக்கம் ஊராட்சி மக்கள் கோரிக்கை
அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு புது கட்டடம் ஒத்திவாக்கம் ஊராட்சி மக்கள் கோரிக்கை
ADDED : நவ 26, 2025 04:52 AM

ஒத்திவாக்கம், நவ. 26-
ஒத்திவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி, ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒத்திவாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, கழிப்பறை ஆகியவை தனித்தனி கட்டடத்தில் இயங்கி வந்தன.
இந்த கட்டடங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், இடிந்து விழும் சூழல் ஏற்பட்டது.
அதன் பின், குழந்தைகள் நலன் கருதி, அதே பகுதியில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்திற்கு, தற்காலிகமாக அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இங்கு, இடநெருக்கடியில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால், ரேஷன் கடைக்கு வருபவர்கள் மழை, வெயிலில் நின்று கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதன் பின் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, கழிப்பறை ஆகியவற்றுக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், கடந்த ஐந்து ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், பழைய அங்கன்வாடி மைய கட்டடம், ரேஷன் கடை, கழிப்பறை வளாகம் ஆகியற்றில் செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
எனவே, குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி அங்கன்வாடி மையம், ரேஷன் கடை, கழிப்பறை ஆகியவற்றுக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

