/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பங்குனி உத்திர உற்சவம் மாமல்லையில் நாளை துவக்கம்
/
பங்குனி உத்திர உற்சவம் மாமல்லையில் நாளை துவக்கம்
ADDED : ஏப் 01, 2025 07:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நாளை பங்குனி உத்திர உற்சவம் துவங்குகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில், பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் வீற்றுள்ள நிலமங்கை தாயாருக்கு, ஆண்டுதோறும் 10 நாட்கள் பங்குனி உத்திர உற்சவம் நடைபெறும். இந்த உற்சவம் நாளை துவங்குகிறது.
மாலை 4:00 மணிக்கு, திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, சிறிய வாகன சேவையில், கோவிலில் உள்புறப்பாடு சென்று, ஊஞ்சல் சேவையாற்றுகிறார்.
வரும் 11ம் தேதி வரை, இதேபோன்று தினசரி உற்சவம், இறுதி நாளில் சுவாமி திருக்கல்யாணம் என நடைபெறும்.

