/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்
/
செங்கை மாவட்ட கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்
செங்கை மாவட்ட கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்
செங்கை மாவட்ட கோவில்களில் பங்குனி உத்திரம் கோலாகலம்
ADDED : ஏப் 11, 2025 10:57 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பங்குனி உத்திரம் விழா கோலாகலமாக நடந்தது.
விடியற்காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் சரவண பொய்கையில் நீராடி, கந்த பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வளர்பிறை ஒட்டிய உத்திரம் தினம் என்பதால் கோவில் முகப்பில் சிதறு தேங்காய் உடைத்தும், அம்மன் கோவில்கள் போன்று அடுப்புகளில் சக்கரை பொங்கல் சமைத்தும் படையலிட்டு வழிபட்டனர். நேர்த்திகடனாக சேவல் கோழிகளும் விடப்பட்டன.
திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு, பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அதேபோல், கொளத்துார் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில், மேட்டுத்தண்டலம் அய்யப்பன் கோவில்களிலும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, தண்டலம் மகேஷ்வரி உடனுறை மகேஷ்வரர் கோவிலிலும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.