/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிழிந்து தொங்கும் பேனரால் செங்கண்மால் பகுதியில் பீதி
/
கிழிந்து தொங்கும் பேனரால் செங்கண்மால் பகுதியில் பீதி
கிழிந்து தொங்கும் பேனரால் செங்கண்மால் பகுதியில் பீதி
கிழிந்து தொங்கும் பேனரால் செங்கண்மால் பகுதியில் பீதி
ADDED : நவ 03, 2025 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் இடையே உள்ள ஓ.எம்.ஆர்., சாலையில் புதிய மனை பிரிவு, அரசியல், சுப நிகழ்ச்சி சார்ந்த விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இச்சாலையில் உள்ள செங்கண்மால் பகுதியில், உயரத்தில் ராட்சத பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அது தற்போது, கிழிந்து தொங்குகிறது.
பலத்த காற்று வீசும் போது முழுமையாக கிழிந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்தால், விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கமலேஷ்,
கேளம்பாக்கம்.