தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நெல் உலர்த்த களம் இல்லாமல் பரமன்கேணி விவசாயிகள் அவதி

 நெல் உலர்த்த களம் இல்லாமல் பரமன்கேணி விவசாயிகள் அவதி

 நெல் உலர்த்த களம் இல்லாமல் பரமன்கேணி விவசாயிகள் அவதி


ADDED : பிப் 13, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்யூர்:பரமன்கேணி கிராமத்தில், நெல் உலர்த்த முறையான நெற்களம் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செய்யூர் அருகே பரமன்கேணி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பரமன்கேணி கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

விளைந்த நெல்லை அறுவடை செய்தவுடன், முதலில் உலர்த்த வேண்டும். இதற்கு, இங்கு முறையான நெற்களம் அமைக்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள், அறுவடை செய்யும் நெல்லை, அதிக வாகன பயன்பாடு இல்லாத தார்ச்சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.

இவ்வாறு சாலையில் உலர்த்தும் போது, நெல் சிதறி வீணாகிறது. எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பரமன்கேணி பகுதியில் நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையில் நனைந்து வீண் விவசாயிகள் கூறியதாவது: நெல் அறுவடை நேரத்தில், பரமன்கேணி கிராமத்தில் முறையான நெற்களம் இல்லாததால், பல சிரமங்களை சந்திக்கிறோம். சாலையில் நெல்லை கொட்டி உலர்த்தும் போது, அவற்றை மீண்டும் அள்ளும் போது சிரமப்பட வேண்டியுள்ளது. மழை வரும் போது, சாலையில் இருந்து நெல்லை உடனே அள்ள முடியாமல் நனைந்து வீணாகிறது. கான்கிரீட் நெற்களத்தில் கொட்டி நெல்லை உலர்த்தவும், அள்ளவும் வசதியாக இருக்கும். வேளாண் துறை அதிகாரிகள் பரமன்கேணி கிராமத்தில் ஆய்வு செய்து, நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us