/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு நாளை முதல் திருத்திய புதிய கட்டணம் வசூல்

UPDATED : மார் 31, 2025 02:41 AM
ADDED : மார் 31, 2025 02:16 AM

மாமல்லபுரம்:சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வாகன சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, நாளை முதல் திருத்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துஉள்ளது.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சுங்க கட்டண அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. சென்னை அடுத்த தாம்பரம் முதல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வரை, ஒரு பிரிவாக உள்ளது.
இப்பகுதி சுங்க கட்டண சாவடிகள், செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் ஆகிய பகுதிகளில் உள்ளன.
இத்தட சுங்க கட்டணம், நிதியாண்டுதோறும் உயர்த்தப்படும். அதன்படி தற்போது, 2025 - 26க்கு, நாளை முதல், 2026 மார்ச் 31ம் தேதி வரை கட்டணம் உயர்த்தப்பட்டு, புதிய திருத்திய கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.