/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
/
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
அரசு பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க பெற்றோர் கோரிக்கை
ADDED : அக் 16, 2025 01:02 AM

பவுஞ்சூர்: கடுகுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு இரும்பு கேட் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அருகே கடுகுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி நுழைவாயில் பகுதியில், இரும்பு கேட் இல்லாததால், பகல் நேரத்தில், நாய், மாடு, ஆடு, போன்ற கால்நடைகள் பள்ளி வளாகத்தில் வளம் வருகின்றன.
பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின், இரவு நேரங்களில் தனி நபர்கள் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மது அருந்துகின்றனர்.
எனவே, பள்ளி நுழைவாயில் பகுதியில் இரும்பு கேட் அமைத்து, நுழைவு வாயில் பகுதியில் மண்கொட்டி உயர்த்தி அமைக்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.