/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி வளாகத்தை சுற்றும் 'ரோமியோ'க்கள் போலீஸ் ரோந்து வர பெற்றோர் வேண்டுகோள்
/
பள்ளி வளாகத்தை சுற்றும் 'ரோமியோ'க்கள் போலீஸ் ரோந்து வர பெற்றோர் வேண்டுகோள்
பள்ளி வளாகத்தை சுற்றும் 'ரோமியோ'க்கள் போலீஸ் ரோந்து வர பெற்றோர் வேண்டுகோள்
பள்ளி வளாகத்தை சுற்றும் 'ரோமியோ'க்கள் போலீஸ் ரோந்து வர பெற்றோர் வேண்டுகோள்
ADDED : ஜூன் 30, 2025 11:38 PM
சிங்கபெருமாள் கோவில், பள்ளி மாணவ - மாணவியர் நலன் கருதி
சிங்கபெருமாள் கோவில் அரசு பள்ளி அருகே சுற்றிவரும்,'ரோமியோ'க்களை கட்டுப்படுத்த, போலீசார் ரோந்து செல்ல வேண்டுமென, பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இப்பள்ளியில், சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.
இதில் பல மாணவியர் தினமும், அரசு பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், சைக்கிளில் வந்து செல்கின்றனர்.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 1.5 கி.மீ., துாரம், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் நடந்து சென்று வருகின்றனர். அப்போது, 'ரோமியோ'க்கள் சிலர், பைக்குகளில் அதிக ஹாரன் ஒலி மற்றும் 'சைலன்சரில்' ஒலி எழுப்பியபடி சுற்றி வருகின்றனர். பள்ளியில் இருந்து அனுமந்தபுரம் சாலையில் உள்ள குளம் வரை, மாணவியரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
அப்போது அவர்கள், மாணவியரை கிண்டல் செய்வதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், மாணவியரிடம் 'இன்ஸ்டாகிராம் ஐ.டி.,' கேட்டு தொல்லை கொடுப்பதால், மாணவியர் தங்களின் பெற்றோருடன் பள்ளிக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதை கண்காணிக்க வேண்டிய போலீசார், கண்டும் காணாமல் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அசம்பாவிதம் நடக்கும் முன், பள்ளி வளாகம் அருகே சுற்றும் ரோமியோக்களை பிடிக்க, போலீசார் தினமும் ரோந்து செல்ல வேண்டுமென, பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.