/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீப்பிடித்து நாசம்
/
நிறுத்தி வைக்கப்பட்ட கார் தீப்பிடித்து நாசம்
ADDED : நவ 12, 2025 10:35 PM
திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜேஸ்வரன், 36; ஐ.டி., நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், தனக்கு சொந்தமான 'டாடா ஹரியர்' காரை, இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள கிளப் ஹவுசில் நிறுத்திவிட்டு, நண்பர்களுடன் விளையாடி உள்ளார்.
அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.
உடனே, சிறுசேரி தீயணைப்பு துறையினருக்கும், கேளம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கார் தீப்பற்ற துவங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மொபைல் போனுக்கு 'சார்ஜ்' ஏற்றும் 'பவர் பேங்க்' காரின் இருக்கையில் இருந்த நிலையில், அப்போது டீசல் கசிவும் இருந்ததால் தீப்பற்றி இருக்கலாம் என தெரிந்தது.
இதுதொடர்பாக, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

