/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் பயணியருக்கு இடையூறாக கூடுவாஞ்சேரியில் வாகன நிறுத்தம்
/
ரயில் பயணியருக்கு இடையூறாக கூடுவாஞ்சேரியில் வாகன நிறுத்தம்
ரயில் பயணியருக்கு இடையூறாக கூடுவாஞ்சேரியில் வாகன நிறுத்தம்
ரயில் பயணியருக்கு இடையூறாக கூடுவாஞ்சேரியில் வாகன நிறுத்தம்
ADDED : அக் 18, 2024 01:36 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பயணியர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என, பலரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வாயிலாக, தினமும் சென்று வருகின்றனர்.
மாடம்பாக்கம், ஆதனுார் பகுதியில் இருந்து வரும் பயணியர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், பெருமாட்டுநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, லால் பகதுார் சாஸ்திரி சாலையை கடந்து, ரயில் நிலையம் சென்று வருகின்றனர்.
தற்போது, ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வரும் பயணியர், லால் பகதுார் சாஸ்திரி தெருவில், வரிசையாக அணிவகுத்து சாலையோரம் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றுள்ள பராமரிப்பு பணி காரணமாக, கட்டண பார்க்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அப்பணி நிறைவடைந்து, கட்டண பார்க்கிங் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஆனாலும், பயணியர் அதை பயன்படுத்தாமல், வழக்கம் போல் சாலையை ஆக்கிரமித்தே வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, சாலையை ஆக்கிரமித்து இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, வாகன உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.