/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நவநீத கிருஷ்ணருக்கு பார்வேட்டை உற்சவம்
/
நவநீத கிருஷ்ணருக்கு பார்வேட்டை உற்சவம்
ADDED : ஜன 18, 2024 01:55 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் சுவாமி, காணும் பொங்கலன்று, குழிப்பாந்தண்டலத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு, பார்வேட்டை உலா செல்வார்.
மாமல்லபுரம் கோவிலில் நடக்கும் திருப்பணிகளால், இரண்டு ஆண்டுகளாக உற்சவம் நடக்கவில்லை.
இச்சூழலில், பெருமாள் உலா செல்லும் வழியில் உள்ள பெருமாளேரி பகுதியில், பார்வேட்டை உற்சவம் தொடர கருதி, அங்குள்ள நவநீத கிருஷ்ண சுவாமிக்கு, அப்பகுதியினர் நேற்று, பார்வேட்டை உற்சவம் நடத்தினர்.
கோவிலில், காலை, சிறப்பு திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, அலங்கார சுவாமி, வசந்தபுரி, அம்பாள் நகர் வழியே உலா சென்றார்.
பிற்பகல் கோவிலை அடைந்த சுவாமி, முயல் வேட்டையாடுவதாக பாவித்து, பார்வேட்டை உற்சவம் நடந்தது. பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.