/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூரியம்பாக்கத்தில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
/
பூரியம்பாக்கத்தில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
பூரியம்பாக்கத்தில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
பூரியம்பாக்கத்தில் பஸ் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : பிப் 16, 2025 02:19 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், பூரியம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் உள்ளது.
நீர்பெயர், நீலமங்கலம், பூரியம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் சித்தாமூர், மதுராந்தகம், சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இப்பகுதியில், தனியார் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
பள்ளி மாணவர்கள், பணிக்குச் செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது. அது தற்போது பராமரிப்பின்றி, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் அமர இடமின்றி, கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பூரியம்பாக்கத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

