/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுார் பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை
/
பாலுார் பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை
பாலுார் பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை
பாலுார் பஸ் நிறுத்த நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை
ADDED : மே 19, 2025 02:07 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு பாலுார் -- கண்டிகை சாலையில், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
செங்கல்பட்டு -- குருவன்மேடு, செங்கல்பட்டு -- கொணாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.
இந்த பேருந்து நிறுத்த நிழற்குடை சிதிலமடைந்து மண் குவியல் மற்றும் குப்பை நிறைந்து, பயணியர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால் பயணியர் வெயில், மழைக்காலங்களில் நின்றபடி காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
எனவே, இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.