/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விமான டயர் வெடித்ததால் பயணியர் பீதி
/
விமான டயர் வெடித்ததால் பயணியர் பீதி
ADDED : அக் 06, 2024 01:23 AM
சென்னை, ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், 157 பயணியருடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில், மதியம் 2:00 மணிக்கு தரையிறங்கியபோது, எதிர்பாராதவிதமாக விமானத்தின் பின்பக்க இடது டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால், விமானம் குலுங்கியது; உள்ளே இருந்த பயணியரும் அலறினர். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தினார்.
அங்கு வந்த விமான பாதுகாப்பு அதிகாரிகள், தரை தள ஊழியர்கள் இழுவை வண்டி வாயிலாக விமானத்தை நகர்த்தி, பாதுகாப்பாக விமானங்கள் நிறுத்தும் பகுதிக்கு எடுத்து வந்தனர்.
விமான பயணியர் பத்திரமாக இறக்கப்பட்டு, சர்வதேச வருகை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். விமான நிலைய பொறியாளர்கள் குழு, விமானத்தின் டயரை சீர் செய்யும் பணியில் இறங்கினர்.
சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு புறப்படும் வழக்கமான நேரத்தைவிட 2 மணி நேரம் தாமதமாக, விமானம் புறப்பட்டு சென்றது.