/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரும்பாக்கத்தில் நிற்காத அரசு பஸ் அதிருப்தியில் பயணியர் முற்றுகை
/
கரும்பாக்கத்தில் நிற்காத அரசு பஸ் அதிருப்தியில் பயணியர் முற்றுகை
கரும்பாக்கத்தில் நிற்காத அரசு பஸ் அதிருப்தியில் பயணியர் முற்றுகை
கரும்பாக்கத்தில் நிற்காத அரசு பஸ் அதிருப்தியில் பயணியர் முற்றுகை
ADDED : செப் 25, 2025 01:00 AM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, கரும்பாக்கம் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தை முற்றுகையிட்ட பயணியர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை இடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், வளர்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலை வழியாக, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், போக்குவரத்திற்கு பெரும்பாலும் பேருந்துகளையே நம்பி உள்ளனர்.
ஆனால், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில் உள்ள கரும்பாக்கம் நிறுத்தத்தில், அரசு பேருந்துகள் அடிக்கடி நிற்காமல் செல்வதாக, அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதேபோல நேற்று காலையும், கரும்பாக்கம் நிறுத்தத்தில் அரசு பேருந்து ஒன்று நிற்காமல் சென்றுள்ளது.
உடனே பயணியர், அங்கிருந்தோர் உதவியுடன் 'பைக் 'குகளில் பின்தொடர்ந்து சென்று, சிறிது துாரத்தில் பேருந்தை மடக்கி முற்றுகையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், பேருந்திற்காக காத்திருந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும், ஓடி வந்து பேருந்தில் ஏறினர். அதன் பின் பேருந்து புறப்பட்டுச் சென்றது.