/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க பயணியர் வேண்டுகோள்
/
மறைமலைநகரில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க பயணியர் வேண்டுகோள்
மறைமலைநகரில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க பயணியர் வேண்டுகோள்
மறைமலைநகரில் இருந்து கூடுதலாக பஸ் இயக்க பயணியர் வேண்டுகோள்
ADDED : பிப் 05, 2025 01:53 AM
மறைமலைநகர்,மறைமலைநகர் என்.எச்--2 எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு, தடம் எண் 118 பேருந்து 16 முறையும், கலிவந்தப்பட்டு -- மறைமலைநகர்- தாம்பரம் பேருந்து 12 முறையும் இயக்கப்படுகின்றன.
மேலும், '118ஆர்' மறைமலைநகர்- வல்லாஞ்சேரி -- தாம்பரம் பேருந்து வார நாட்களில் மட்டும், நாள் ஒன்றுக்கு 14 முறையும், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தாமதம் ஆவதால், பயணியர் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பேருந்து பயணியர் கூறியதாவது:
மறைமலைநகர் நகர் பகுதியில் உள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து மாநகர பேருந்து தாம்பரம், பிராட்வே, தி.நகர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது.கொரானோ காலங்களில் அனைத்து பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.
மீண்டும் பேருந்துகள் இயக்கும் போது பிராட்வே, தி.நகர் தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டு, தாம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்து பற்றாக்குறையாக இருப்பதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தில் பேருந்தை தவற விடும் பட்சத்தில் 1.5 கி.மீ., துாரம் நடந்து சென்று, ஜி.எஸ்.டி., சாலை சென்று பேருந்து பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதே போல கீழக்கரணை, சித்தமனுார், மறைமலைநகர் காவல் நிலையம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்ட '118கே' பேருந்து, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாததால், அந்த பகுதியில் இருந்து பணிக்குச் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு மனு அளித்தால், குறைவான பயணியர் வந்ததால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த பகுதியில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு, மீண்டும் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.