/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் சக்கரத்தில் குபுகுபு புகை மதுராந்தகத்தில் பயணியர் அலறல்
/
ரயில் சக்கரத்தில் குபுகுபு புகை மதுராந்தகத்தில் பயணியர் அலறல்
ரயில் சக்கரத்தில் குபுகுபு புகை மதுராந்தகத்தில் பயணியர் அலறல்
ரயில் சக்கரத்தில் குபுகுபு புகை மதுராந்தகத்தில் பயணியர் அலறல்
ADDED : ஏப் 21, 2025 01:27 AM

மதுராந்தகம்,:மதுராந்தகத்தில், 'பிரேக்' பழுது காரணமாக, பயணியர் மின்சார ரயிலில் புகை வந்ததால், பயணியர் அலறினர். பின், ரயிலில் ஏற்பட்ட பழுது கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை, விழுப்புரம் பயணியர் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று வழக்கம்போல் இந்த ரயில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு, காலை 6:35 மணிக்கு வந்தது.
அங்கிருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போது, ரயிலின் மூன்றாவது பெட்டியின் வலதுபுறம் உள்ள சக்கரத்தில் புகை கிளம்பி உள்ளது.
இதைப் பார்த்து பயணியர் கூச்சலிட்டு, ஓட்டுநருக்கு தெரிவித்து உள்ளனர்.
உடனே ரயில் நிறுத்தப்பட்டது. பின், ரயில் நிலைய அதிகாரிகள் பார்த்த போது, 'பிரேக் ஷூ' சக்கரத்தை இறுக்கமாக பிடித்திருப்பது தெரிந்தது.
அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள், பழுதை சரி செய்தனர்.
அதன் பின், 40 நிமிடங்கள் தாமதமாக, ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதனால் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்ற பயணியர் மிகுந்த அவதி அடைந்தனர்.