/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்று பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாததால் பயணியர் அவதி
/
மாற்று பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாததால் பயணியர் அவதி
மாற்று பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாததால் பயணியர் அவதி
மாற்று பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முன்னறிவிப்பு இல்லாததால் பயணியர் அவதி
ADDED : பிப் 13, 2024 08:18 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு --- திருவள்ளூர் தடத்தில், தடம் எண்: 82சி அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், வழக்கமாக செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதுார் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
எந்த அறிவிப்புமின்றி
இந்த தடத்தில், சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர், தெள்ளிமேடு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
சமீபகாலமாக, சில அரசு பேருந்து ஓட்டுனர்கள், வழக்கமான தடத்தில் பேருந்துகளை இயக்காமல், மறைமலை நகர் சாமியார் கேட் தடத்தில் பேருந்துகளை இயக்குகின்றனர். இதனால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது:
பேருந்துகள் எந்த அறிவிப்புமின்றி, மாற்று பாதையில் இயக்கப்படுவதால், செங்கல்பட்டில் இருந்து திருக்கச்சூர், தெள்ளிமேடு பகுதிகளுக்கு செல்லும் பயணியர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இறக்கி விடப்படுகின்றனர்.
அதே போல, திருவள்ளூரில் இருந்து வரும் தெள்ளிமேடு பயணியர், ஆப்பூரில் இறக்கிவிடப்படுகின்றனர்.
பேருந்து மாற்று பாதையில் செல்வதால், தெள்ளிமேடு பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பழுதடைந்தால் மட்டுமே, அவை சரிசெய்யப்படும்.
சில மணி நேரங்கள் வரை, பேருந்துகள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, ஓட்டுனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேருந்துகள் மாற்றி இயக்கப்படுகின்றன.
எதிர் திசையில்
அதே போல, சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் மூடப்பட்டு, வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது, அரசு பேருந்து ஓட்டுனர்கள் முதலில் செல்ல வேண்டும் என, எதிர் திசையில் செல்வதால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, போக்குவரத்து துறை உயரதிகாரிகள், அரசு ஓட்டுனர்களின் பணிகளை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

