/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயணியர் நிழற்குடை இன்றி சீக்கனாங்குப்பத்தில் அவதி
/
பயணியர் நிழற்குடை இன்றி சீக்கனாங்குப்பத்தில் அவதி
ADDED : நவ 24, 2024 07:53 PM
கூவத்துார்:கூவத்துார் அடுத்த சீக்கனாங்குப்பம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கிழக்குக் கடற்கரைச் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
சீக்கனாங்குப்பம், வேலுார், ஆட்சிவிளாகம் உள்ளிட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லுாரிகள் செயல்படுகின்றன. ஆகையால், தினசரி ஏராளமானோர் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், கோடை மற்றும் மழை காலத்தில் கடுமையாக சிரமப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சீக்கனாங்குப்பத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.