/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கால்நடை விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
/
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கால்நடை விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கால்நடை விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கால்நடை விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
ADDED : அக் 09, 2025 03:15 AM
சென்னை, :'ஓட்டுக்காக மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்குவது, கால்நடைகளுக்கு ஆபத்து விளைவிப்பதோடு, அவற்றின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் செயல். அரசு தன் முடிவை கைவிட வேண்டும்' என, நவீன கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்க.சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு, பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், 200 ஏக்கரில் வசிப்போருக்கு பட்டா வழங்க முயற்சி நடப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை, அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், அவற்றை தனி நபருக்கு வழங்குவது ஏற்புடையதல்ல.
தேர்தல் நேரம் நெருங்குவதை ஒட்டி, ஓட்டுக்காக, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.
மாடுகளுக்கான, மேய்க்கால் நிலத்தை முறையாக பயன்படுத்த முடியாததால், கால்நடை வளர்ப்போர் கால்நடை வளர்க்கும் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அரசின் இந்த முயற்சி, கால்நடைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குவதோடு, அவற்றிற்கு ஆபத்தை விளைவிக்கும்.
எனவே, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தனி நபருக்கு பட்டா வழங்கினால், அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு நிலத்தை ஒதுக்க வேண்டும். இல்லையேல், பட்டா வழங்கும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு தங்க.சாந்த குமார் கூறினார்.