/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெளியாட்களுக்கு பட்டா ஒழலுார் மக்கள் ஆர்ப்பாட்டம்
/
வெளியாட்களுக்கு பட்டா ஒழலுார் மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:வெளியூர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யக்கோரி, ஒழலுார் கிராமத்தினர் நேற்று, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாவது:
ஒழலுார் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, பட்டாவுடன் கூடிய வீட்டு மனை வழங்க வேண்டும்.
ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
வெளியூர் மக்களுக்கு ஒழலுாரில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து, சர்வே எண் 440ல், விளையாட்டு மைதானமாக மாற்றி அமைக்க வேண்டும்.
இவ்வாறு, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.