/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தரக்கூடாது :விவசாயிகள் போர்க்கொடி
/
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தரக்கூடாது :விவசாயிகள் போர்க்கொடி
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தரக்கூடாது :விவசாயிகள் போர்க்கொடி
மேய்க்கால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா தரக்கூடாது :விவசாயிகள் போர்க்கொடி
ADDED : டிச 31, 2025 05:24 AM

செங்கல்பட்டு: 'செங்கல்பட்டு மாவட்டத்தில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும்' என, நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி குற்றஞ்சாட்டினர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது. பல துறை அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
ஜெயச்சந்திரன், விவசாயி, அரியனுார்: மதுராந்தகம் ஏரியிலிருந்து, செய்யூர் வரை, 1986ம் ஆண்டு, 32 கி.மீ., உயர்மட்ட கால்வாய் கட்டப்பட்டது. 40 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக துார்வாராததால், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.
மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், கால்நடை மேய்ச்சலுகாக மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கால்நடைகளை மேய்க்க இடம் இல்லாமல் சிரமமாக உள்ளது.
அத்துடன், அரசு திட்டங்களுக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டு பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சினேகா கலெக்டர்: மதுராந்தகம் - செய்யூர் உயர்மட்ட கால்வாய் சீரமைப்புக்கு நீர்வளத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
முரளிமோகன், கரும்பு விவசாய சங்க செயலர்: விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர், கரும்பு, மணிலா போன்றவற்றை காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும்.
ரவி மீனா, மாவட்ட வன அலுவலர்: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, கூட்டத்தில் விவாதம் நடந்தது.
அத்துடன், கால்நடைகளின் மேய்ச்சல் வசதி கருதி, அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்குவதை தவிர்க்க வேண்டும்; நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் கூட்டத்தில் முன்வைத்தனர்.

