/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புலிகுன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோற்சவம்
/
புலிகுன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோற்சவம்
புலிகுன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோற்சவம்
புலிகுன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோற்சவம்
ADDED : அக் 09, 2025 03:19 AM

திருக்கழுக்குன்றம், :புலிகுன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அடுத்த, புலிகுன்றம் லஷ்மி நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. லஷ்மி நாராயண பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஸ்ரீனிவாசன், ராமர், சுதர்சனர், லஷ்மி ஹயக்ரீவர், லஷ்மி நரசிம்மர் உள்ளிட்ட சுவாமியர் உள்ளனர்.
கோவில் பரிகார வழிபாடாக, கடந்த 5ம் தேதி முதல், நேற்று வரை பவித்ரோற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, தினசரி காலை, மாலை யாகம் நடத்தி, நேற்று முன்தினம் மூலவர், உற்சவ சுவாமியருக்கு பவித்ரம் சாற்றப்பட்டது.
நேற்று மாலை பவித்ரம் அகற்றி, சிறப்பு வழிபாட்டுடன் உற்சவம் நிறைவுபெற்றது.