/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைப்பிரிவு நிர்வாகத்திற்கு எதிராக போஸ்டர் அடித்து மக்கள் போராட்டம்
/
மனைப்பிரிவு நிர்வாகத்திற்கு எதிராக போஸ்டர் அடித்து மக்கள் போராட்டம்
மனைப்பிரிவு நிர்வாகத்திற்கு எதிராக போஸ்டர் அடித்து மக்கள் போராட்டம்
மனைப்பிரிவு நிர்வாகத்திற்கு எதிராக போஸ்டர் அடித்து மக்கள் போராட்டம்
ADDED : ஜன 29, 2024 04:13 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதியில், சக்தி கணபதி நகர் உள்ளது. இங்கு, எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், வீட்டுமனை நிர்வாகத்தை கண்டித்து, புதிதாக வீட்டுமனை வாங்க வரும் வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில், ஏமாறாதே... ஏமாறாதே... என, விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் பேனர் அமைத்துள்ளனர்.
இது குறித்து, மனை பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:
சக்தி கணபதி நகரில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கினோம். நகரில், தற்போது, 2,000 காலி மனைகள் உள்ளன.
இப்பகுதியில் அமைந்துள்ள சாலைகள் எதுவும் கிராம ஊராட்சிக்கு தானம் செய்து தரவில்லை. நிலம் வாங்கியவர்களுக்கு, இந்நாள் வரை பட்டா எதுவும் பெற்றத் தரவில்லை.
கோவிலுக்கு இடம், இடுகாட்டிற்கு இடம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விளையாட்டு திடல் அமைக்க இடம் என, பொதுவான இடம் எதுவும், மனை பிரிவு சார்பாக ஒதுக்கப்படவில்லை.
இறுதி சடங்கு செய்வதற்கு இடம் இல்லாமல், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் இன்றி அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
மனை பிரிவு உரிமையாளர் எஸ்.வி.எஸ்., என்டர்பிரைசஸ் வேலுச்சாமி மீது, அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்துள்ளோம். விசாரணை நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எங்களைப் போன்ற அப்பாவி பொதுமக்கள், வீட்டுமனை வாங்கி ஏமாறுவதை தடுக்கும் வகையில், வீட்டுமனை வாங்கி ஏமாறாதே என, விழிப்புணர்வு போஸ்டர் அடித்து, சக்தி கணபதி நகர் பகுதியில் சுவரொட்டிகள் மற்றும் பேனர் வைத்துள்ளோம்.
நிலம் வாங்க வரும் நபர்களின் கவனத்திற்கு, இது தொடர்பாக யாரும் ஏமாறாமல் இருக்க, தொழுப்பேட்டில் அமைந்துள்ள கிராம ஊராட்சியில் விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.