/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது ரேஷன் கடையில் உணவு பொருள் வழங்காததால் மக்கள் ஏமாற்றம்
/
புது ரேஷன் கடையில் உணவு பொருள் வழங்காததால் மக்கள் ஏமாற்றம்
புது ரேஷன் கடையில் உணவு பொருள் வழங்காததால் மக்கள் ஏமாற்றம்
புது ரேஷன் கடையில் உணவு பொருள் வழங்காததால் மக்கள் ஏமாற்றம்
ADDED : டிச 23, 2025 01:48 AM
திருப்போரூர்: திருப்போரூர் அருகே, புதிய ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்காததால், மக்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சி, 15வது வார்டு, படவட்டம்மன் கோவில் தெருவில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் திருப்போரூர் கூட்டுறவு வங்கி அருகே உள்ள ரேஷன் கடைக்கு, 2 கி.மீ., துாரம் சென்று, ஓ.எம்.ஆர்., சாலையைக் கடந்து சென்று, பொருட்களை வாங்கி தலையில் சுமந்து வந்து சிரமப்பட்டனர்.
மேலும், ஓ.எம்.ஆர்., சாலையைக் கடக்கும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கியும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே, தங்கள் பகுதிலேயே புதிதாக சொந்த கட்டடம் கட்டி, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும் என, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, திருப்போரூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், மேற்கண்ட திருப்போரூர் 15வது வார்டில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
இதை கடந்த ஜூலை 30ம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், பாயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின், கடந்த ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த புதிய ரேஷன் கடையை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
திறப்பு விழா செய்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் இன்னும், ரேஷன் கடைக்கு பொருட்களை வரவழைத்து வழங்காததால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், பழையபடியே மக்கள் 2 கி.மீ., துாரம் சென்று பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி, புதிய ரேஷன் கடையில் பொருட்களை வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

