/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின் அழுத்தத்தால் புத்துார் மக்கள் அவதி
/
குறைந்த மின் அழுத்தத்தால் புத்துார் மக்கள் அவதி
ADDED : மே 17, 2025 08:49 PM
செய்யூர்:செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அரசு ஆரம்பப் பள்ளி எதிரே உள்ள மின்மாற்றியில் இருந்து கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது.
வீடுகள் மற்றும் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்கள் என 300க்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஒரே மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால், காலை மற்றும் இரவு நேரத்தில் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டு பல்வேறு வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் செயல்படாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் மின்விசிறிகள் மெதுவாக இயங்குவதால், போதிய காற்றோட்டம் இல்லாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கூடுதலாக மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.