/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைந்த மின் அழுத்த பிரச்சனை திருப்போரூர் மக்கள் அவதி
/
குறைந்த மின் அழுத்த பிரச்சனை திருப்போரூர் மக்கள் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்சனை திருப்போரூர் மக்கள் அவதி
குறைந்த மின் அழுத்த பிரச்சனை திருப்போரூர் மக்கள் அவதி
ADDED : ஜூன் 25, 2025 08:44 PM
திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி, 6வது வார்டில், இரண்டு மாதங்களாக குறைந்த மின் அழுத்த பிரச்சனையால் மின்சாதன பொருட்கள் பழுதடைவதாக கவுன்சிலர் லோகநாதன் திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்போரூர் பேரூராட்சி 6வது வார்டு அபிராமி நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த மின் அழுத்த பிரச்சனை இருந்து வருகிறது.
இதனால், குளிர்சாதனபெட்டி, மின்விசிறி, வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்குவதில்லை. இயக்கும்போது பழுதடைந்து விடுகிறது. பகலில் வேலைக்கு சென்று வீடு திரும்பும் மக்கள் இரவில் துாங்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் படிக்க முடியமால் மன உளைச்சல் அடைகின்றனர். எனவே, குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.