/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலை தராததால் வன்னியநல்லுார் மக்கள் மறியல்
/
100 நாள் வேலை தராததால் வன்னியநல்லுார் மக்கள் மறியல்
100 நாள் வேலை தராததால் வன்னியநல்லுார் மக்கள் மறியல்
100 நாள் வேலை தராததால் வன்னியநல்லுார் மக்கள் மறியல்
UPDATED : ஆக 09, 2025 10:51 AM
ADDED : ஆக 09, 2025 01:25 AM

சித்தாமூர்:வன்னியநல்லுார் ஊராட்சியில், முறையாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து, கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், குளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், சித்தாமூர் ஒன்றியம் வன்னியநல்லுார் ஊராட்சியில், தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 1,200 பேர் பயன்பெற்ற நிலையில், இந்த வாரம், 100 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தியடைந்த கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10:30 மணியளவில், சூணாம்பேடு - தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
சூணாம்பேடு போலீசார், சித்தாமூர் பி.டி.ஓ., ஜெகன் ஆகியோர் வந்து, அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அடுத்த வாரத்தில் இருந்து சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.