/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார், ஓட்டேரி பகுதியில் மின் தடையால் மக்கள் அவதி
/
வண்டலுார், ஓட்டேரி பகுதியில் மின் தடையால் மக்கள் அவதி
வண்டலுார், ஓட்டேரி பகுதியில் மின் தடையால் மக்கள் அவதி
வண்டலுார், ஓட்டேரி பகுதியில் மின் தடையால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 15, 2025 07:59 PM
வண்டலுார்,:வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி பகுதியில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், பகுதிவாசிகள் கடும் இன்னலை சந்திக்கின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 15 வார்டுகளில், 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர்.
இங்கு, ஓட்டேரி மற்றும் ஓட்டேரி விரிவு பகுதியில், வார்டு 12, 13க்கு உட்பட்ட தெருக்களில், அடிக்கடி மின் விநியோகம் தடைபடுகிறது. இதனால், பகுதிவாசிகள் கடும் இன்னலை சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.
பகுதிவாசிகள் கூறியதாவது:
தினமும் ஐந்து முறையாவது மின் தடை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகள், முதியோர், உடல் நலம் சரியில்லாதோர், மிகுந்த அவஸ்தையை சந்திக்க வேண்டி உள்ளது.
மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் கேட்டால், மின் தடைக்கான காரணம் குறித்து, எவ்வித விளக்கமும் கூறுவதில்லை.
இரவு நேரங்களில் மின் தடை ஏற்படும்போது, கொசுக் கடியால் மக்களின் துாக்கம் கெட்டு, மறுநாள், தங்கள் வேலைகளை சரிவர செய்ய முடியாத நிலை உருவாகிறது. கல்விக்கூடம் செல்லும் குழந்தைகள், பள்ளிகளில் துாங்கி வழிகிறார்கள்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.