/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் ஒரு மணிநேரம் மின்தடையால் மக்கள் அவதி
/
செங்கையில் ஒரு மணிநேரம் மின்தடையால் மக்கள் அவதி
ADDED : டிச 09, 2025 05:04 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், திடீரென மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு நகராட்சி மையப்பகுதியில், வேதாசலம் நகர் அமைந்துள்ளது.
இந்நகரின் அருகில் ராகவனார் தெரு, தேவராஜனார் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன.
இங்கு வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணிக்கு திடீரென, நுகர்வோருக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, செங்கல்பட்டு உதவி பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் தொடர்பு கொண்டு கேட்ட போது, மின் துண்டிப்பு குறித்து பதில் எதுவும் தரவில்லை.
அதன் பின், மாலை 4:15 மணிக்கு, மின் வினியோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து, அண்ணா நகர் மின்வாரிய உதவி பொறியாளர் கூறுகையில், 'திரையரங்கு பகுதியில், மின்மாற்றி பழுது ஏற்பட்டதை சீரமைக்க, மின்கம்பிகளை உரசி சென்ற மரக்கிளைகளை வெட்டியதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின், மின் வினியோகம் செய்யப்பட்டது' என்றார்.

