/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு
/
கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு
கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு
கிணற்றின் மீது இரும்பு தடுப்பு திருமணி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 27, 2025 05:54 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருமணி ஊராட்சி யில் உள்ள பொது கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி சேதமடைந் துள்ளதால், புதிதாக அமைக்க வேண்டு மென, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த திருமணி ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்க, திருமணி பகுதியில் உள்ள ஏரியில் இரண்டு பொது கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த இரண்டு கிணறுகளில் ஒரு கிணறு, கான்கிரீட் மூடியால் மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மற்றொரு கிணற்றின் மீது இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த இரும்பு தடுப்பு வேலியின் ஒரு பகுதி உடைந்தது.
தற்போது கிணறு திறந்த நிலையில் உள்ளதால், இந்த பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்தும் 'குடிமகன்'கள், காலி பாட்டில்களை கிணற்றில் வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால், கிணற்றில் உள்ள தண்ணீர் மாசடைந்து வருகிறது.
எனவே, இந்த கிணற்றின் மீது இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, திருமணி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

