/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனிநபர் விவசாய மேம்பாடு கிணறுகள் அமைக்க அனுமதி
/
தனிநபர் விவசாய மேம்பாடு கிணறுகள் அமைக்க அனுமதி
ADDED : மார் 16, 2025 09:02 PM
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவ்வூராட்சிகள் சார்ந்து 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் எடுத்தல், குளம் மற்றும் வடிகால்வாய் துார்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், இத்திட்டத்தின் கீழ், தனி நபர் விவசாயத்தை மேம்படுத்த தகுதியுள்ள விவசாய பயனாளிகளுக்கு, தனி நபர் கிணறு அமைக்க 10 லட்சம் ரூபாய் நிதி அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது
கடந்த ஆண்டு தேர்தல் காரணமாக இதற்கான பணி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு பணி துவங்கப்படாததால், அவை ரத்து செய்யப்பட்டன.
தற்போது சித்தாமூர், மதுராந்தகம், திருப்போரூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த தகுதியுள்ள 30 விவசாயிகளுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வீதம், 3 கோடி ரூபாய் மதிப்பில் தனிநபர் கிணறு அமைத்தல் பணிக்கான அனுமதியை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
--நமது நிருபர்--